Sunday, June 25, 2023

724. சொன்னபடி ஏன் செய்யவில்லை?

பேராசிரியர் மருதமுத்துவைத் தன் அறைக்கு அழைத்தார் கல்லூரியில் அவன் பணி செய்யும் துறையின் தலைவரான கருணாகரன்.

"மருதமுத்து! இந்தச் சின்ன வயசில இப்படி ஒரு நேஷனல் செமினார்ல பேச உங்களுக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கறது பெரிய விஷயம். இதுக்குக் காரணம் உங்களோட பிரேக்த்ரூ ரிஸர்ச்தான். செமினார் நம்ம கல்லூரியில நடந்தாலும் பல பெரிய கல்லூரிகளிலேந்து பேராசிரியர்கள் வருவாங்க. சில பேரு தங்களோட அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தி கண்டபடி கேள்விகள் கேட்டு செமினார்ல பேசறவங்களைக் குழப்பி மட்டம் தட்டறதுக்காகவே வருவாங்க. கேள்விகளைக் கடைசியில வச்சுக்க சொல்லி நான் முன்னாலேயே அறிவிச்சுடறேன். ஆனாலும் சில பேர் நீங்க பேசும்போது குறுக்கிட்டுக் கேள்வி கேட்கத்தான் செய்வாங்க. நீங்க பேசும்போது அப்படி யாராவது கேள்வி கேட்டா, கேள்விகளுக்குக் கடைசியில பதில் சொல்றதா சொல்லிடுங்க. கடைசியில நேரம் இல்லேன்னு சொல்லி நான் செமினாரை முடிச்சுடறேன். சரியா?" என்றார் கருணாகரன்.

மருதமுத்து தலையாட்டினார்.

"நான் அவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க ஏன் கேள்விகளை அனுமதிச்சீங்க? அதைத் தவிர சில பேராசிரியர்களை மேடைக்கு அழைச்சு அவங்க சொல்ல வந்த விஷயத்தை விளக்க வேறு சொன்னீங்க!" என்றார் கருணாகரன் சற்றுக் கோபத்துடன்.

"சார்! அவங்க கேள்வி கேட்டதால சில விஷயங்களை என்னால இன்னும் தெளிவா விளக்க முடிஞ்சது. நிறையப் படிச்ச அனுபவம் உள்ளவங்க மேடையேறிப் பேசி தாங்க சொல்ல வந்த விஷயங்களை விளக்கினதால என்னால புதுசா பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது!" என்றான் கருணாகரன்.

"நான் சொன்ன முறையைப் பின்பற்றலையேங்கறதுக்காகத்தான் கேட்டேன். ஆனா நீங்க சொல்ற காரணங்கள் சரியாத்தான் இருக்கு. செமினார் முடிஞ்சதும் எல்லாருமே திருப்தியா இருந்த மாதிரிதான் இருந்தது. நீங்களும் உங்களைப் பத்தின ஒரு நல்ல மதிப்பை எல்லார் மனசிலேயும் உருவாக்கிட்டீங்க. பாராட்டுக்கள்" என்றார் கருணாகரன் புன்னகையுடன்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 73 
அவையஞ்சாமை

குறள் 724:
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.

பொருள்:
கற்றவரின் முன் தான் கற்றவற்றை அவருடைய மனதில் பதியுமாறு சொல்லி, அதிகம் கற்றவரிடமிருந்து மேலும் கற்க வேண்டும்.

குறள் 723
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...