"காதலுக்குக் கண் இல்லேம்பாங்க. அப்ப மொழி மட்டும் எதுக்கு?" என்றான் நன்மாறன்.
சில மாதங்கள் கழித்து இளந்திரையன் நன்மாறனைச் சந்தித்தபோது, நன்மாறன் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணர்ந்தான்.
"என்ன, மனைவியோட சண்டையா?" என்றான் இளந்திரையன்.
"கிட்டத்தட்ட அப்படித்தான். மொழிப் பிரச்னைதான் காரணம்" என்ற நன்மாறன், தன் பிரச்னையை நண்பனிடம் விளக்கினான்.
"அவ மொழி தெரிஞ்சவங்க யார்கிட்டேயாவது சொல்லி விளக்கச் சொல்ல வேண்டியதுதானே!"
"அவ மொழி தெரிஞ்சவங்க யாருமே இந்த ஊர்ல இல்ல. வெளியூர்ல அவளைப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த ஊர்ல அவ மொழி பேசறவங்க நிறைய பேர் இருக்காங்க. ஆனா, இந்த ஊர்ல யாரும் இல்ல!" என்றான் நன்மாறன்.
"ஒருவர் இருக்கிறார்!" என்றான் இளந்திரையன்.
படைத்தலைர் தங்களை விருந்துக்கு அழைத்திருப்பதாக மனைவி யசோதாவிடம் சைகையில் கூறி அவளுக்குப் புரிய வைத்து, அவளுடன் படைத்தலைவர் வீட்டுக்குச் சென்றான் நன்மாறன்.
விருந்து முடிந்ததும், திடீரென்று யசோதாவிடம் அவள் மொழியில் பேச ஆரம்பித்தார் படைத்தலைவர்.
இன்ப அதிர்ச்சி அடைந்த யசோதா, "உங்களுக்கு இந்த மொழி தெரியுமா?" என்றாள், வியப்புடன்.
"உன் கணவன் கால்ல போட்டிருக்கற கழலைக் கழற்றச் சொல்றியாமே!" என்றார் படைத்தலைவர்.
"ஆமாங்க! பெண்கள் கால்ல கொலுசு போட்டுக்கற மாதிரி, இவர் ஒரு வளையத்தை மாட்டிக்கிட்டுத் திரியறாரு. அதைக் கழற்றுங்கன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். கேக்க மாட்டேங்கறாரு. மொழிப் பிரச்னையால என்னால அவர்கிட்ட விளக்க முடியல!"
"உன்கிட்டதாம்மா விளக்கணும். உன் கணவன் கால்ல போட்டிருக்கறது வீரக்கழல். தங்களோட உயிரைக் கூட மதிக்காம போர்க்களத்தில வீரத்தைக் காட்டி நிலையான புகழைச் சம்பாதிக்கிற சில வீரர்களுக்குத்தான் அரசர் இந்த வீரக்கழலைப் பரிசாக் கொடுப்பாரு. அது மாதிரி கொடுக்கப்பட்ட ஒரு சில பேர்ல உன் கணவனும் ஒருத்தன். இது அவனுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? அவன் இதை உனக்கு விளக்கிச் சொல்ல முடியாம, உன் மொழி பேசறவங்க யாருன்னு தேடி அலைஞ்சு, என்னைக் கண்டு பிடிச்சான். 'என் மனைவியை உங்ககிட்ட அழைச்சுக்கிட்டு வரேன். நீங்க சொல்லிப் புரிய வையுங்க'ன்னு கேட்டான். அதனால, அவனை கௌரவிக்கற மாதிரி ஒரு விருந்து கொடுத்து, உன்னை இங்கே வரவழைச்சு உங்கிட்ட விளக்கமா சொல்லலாம்னு தீர்மானிச்சேன்.
படைத்தலைவர் தன் மனைவியிடம் என்ன சொல்கிறார் என்று புரியாமல் நன்மாறன் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது, யசோதா அவன் காலில் போட்டிருந்த கழலைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.
பொருட்பால்
படையியல்
அதிகாரம் 78
படைச்செருக்கு
குறள் 777:
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
No comments:
Post a Comment